ரூ.2 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க கோரிக்கை
விருதுநகர், நவ.11: இபிஎப் ஓய்வூதியம் பெறுவோருக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியமாக ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் இபிஎப்.95 ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வூதியம் பெறுவோர் நலச்சங்கம் உறுப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், தனியார் நிறுவனங்களில் வேலை செய்து ஓய்வு பெற்ற நிலையில், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் இபிஎப் 95 ஓய்வூதிய திட்டத்தில் மாதம் ரூ.739 ஓய்வூதியம் பெற்று வறுமையில் வசித்து வருகிறோம்.கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், ஹரியானா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வூதியம் பெறும் அனைவரும் சமூக பாதுகாப்பு திட்டதின் கீழ் ஓய்வூதியம் வழங்க மூத்த குடிமக்களுக்கு மாநில அரசுகள் உதவி வருகின்றன. தமிழ்நாடு அரசும் இபிஎப்.95 ஓய்வூதியதாரர்களுக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியமாக ரூ.2 ஆயிரம் வழங்கி குடும்ப வறுமையை போக்கிட வேண்டுமென தெரிவித்துள்ளனர்.