தீயணைப்பு நிலையத்தில் இன்று தீ தடுப்பு நிகழ்ச்சி
Advertisement
ராஜபாளையம், அக்.11: ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்தில் இன்று தீ தடுப்பு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்தில் ‘வாருங்கள் கற்றுக் கொள்ளலாம்’ என்ற தீ தடுப்பு பாதுகாப்பின் அவசியம் குறித்து விளக்க நிகழ்ச்சி இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் 11 மணி வரை ஒரு நிகழ்ச்சியும், மதியம் 12 முதல் மதியம் 1 மணி வரை ஒரு நிகழ்ச்சியும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை ஒரு நிகழ்ச்சியும் 3 பிரிவுகளாக நடத்தப்பட உள்ளன. பொதுமக்கள் தீயணைப்பு நிலையம் வருகை தந்து வேண்டிய விளக்கங்கள் கேட்டு பெறலாம் என்று ராஜபாளையம் தீயணைப்பு நிலையம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Advertisement