சக்தி காளியம்மன் கோயில் திருவிழா பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலம்
Advertisement
காரியாபட்டி, அக்.10: சக்தி காளியம்மன் கோயில் புரட்டாி பொங்கல் விழாவை முன்னிட்டு பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காரியாபட்டி பேரூராட்சி காமராஜர் காலனியில் அமைந்துள்ள சக்தி காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பால்குடம் ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதில் பக்தர்கள் அழகு குத்தியும் பால்குடம் எடுத்தும் ஊர்வலமாக கோயிலுக்கு வந்து வழிபாடு செய்தனர். மேலும் பக்தர்களின் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு முளைப்பாரி தூக்கி வந்தனர்.
Advertisement