வில்லிபுத்தூர் அருகே கத்தியை காட்டி ரூ.2 லட்சம் மதிப்பு நகை, பணம் பறிப்பு 4 பேர் மீது வழக்கு
வில்லிபுத்தூர், அக்.9: சிவகாசி இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி(41). இவரிடம் அதே பகுதியை சேர்ந்த கனகராஜ், ரஞ்சித், சரவணன், ராஜா ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி 7 கிராம் செயின், 3 கிராம் மோதிரம் என சுமார் ரூ.1 லட்சத்து 42 ஆயிரம் மதிப்புள்ள நகைகளை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. மேலும், அவரது வீட்டில் இருந்த ரூ.40 ஆயிரம் மற்றும் வெள்ளி கொலுசு ஆகியவற்றையும் திருடிச் சென்றதாக தெரிகிறது. இது குறித்து முனியசாமி மல்லி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நான்கு பேரை பிடித்து விசாரணை நடத்திய பிறகு முழு விவரங்கள் தெரியவரும். பறித்து சென்ற நகைகள் மற்றும் பணம், வெள்ளி கொலுசு ஆகியவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1 லட்சத்து 92 ஆயிரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement