வாலிபருக்கு கத்திகுத்து
சிவகாசி, அக்.7: சிவகாசி அருகே விஸ்வநத்தம் காமராஜர் நகரை சேர்ந்தவர் கருப்பசாமி(24). இவருக்கும் சித்துராஜபுரத்தை சேர்ந்த ஜான்பீட்டர் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவத்தன்று முன்விரோதம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த கருப்பசாமி, அவரது உறவினர் ஆறுமுககிருஷ்ணன் என்பவருடன் ஜான்பீட்டர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அங்கு இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் ஜான்பீட்டர் வைத்திருந்த கத்தியால் கருப்பசாமியை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த கருப்பசாமி சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் பேரில் ஜான்பீட்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். இதே போன்று ஜான்பீட்டர் கொடுத்த புகாரின் பேரில் ஆறுமுககிருஷ்ணன், கர்ணன், மாரிசெல்வம் மற்றும் சிலர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.