பட்டாசு ஆலையில் இரவு நேரத்தில் தயாரித்த புஸ்வானம் பறிமுதல்
Advertisement
சிவகாசி, அக்.7:சிவகாசி அருகே புலிப்பாறைப்பட்டியில் மாரனேரி எஸ்ஐ சுந்தரமகாலிங்கம் மற்றும் போலீசார் பட்டாசு ஆலைகளில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள ஒரு பட்டாசு ஆலையில் அனுமதி அளிக்காத இடத்தில் தொழிலாளர்கள் அமர்ந்து இரவு நேரத்தில் புஸ்வானம் என்ற பட்டாசை உற்பத்தி செய்து கொண்டு இருந்தனர். அதனை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் பட்டாசு ஆலை நிர்வாகி பாண்டி என்கிற பால்பாண்டி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement