நாய் கடித்து 4 பேர் காயம்
வத்திராயிருப்பு, டிச. 4: வத்திராயிருப்பு மேல தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் மகாராஜபுரம் பகுதிக்கு சென்ற போது அங்கிருந்த நாய் கடித்துள்ளது. இதேபோன்று மகாராஜபுரத்தை சேர்ந்த ராமராஜ்(67), தம்பிபட்டியை சேர்ந்த சம்பத்கிரி(46), வத்திராயிருப்பு மேலப்பாளையத்தில் கருப்பசாமி(27) ஆகியோரையும் நாய்கள் கடித்தன. இவர்கள் 4 பேரும் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்பு வீட்டிற்கு சென்றனர்.
Advertisement
Advertisement