ரேஷன் கார்டு: சிறப்பு முகாம்
சிவகாசி, செப்.14: விருதுநகர் மாவட்டம் முழுவதும் தாலுகா அலுவலகங்களில் ரேசன் அட்டையில் முகவரியை மாற்றம் செய்யவும், புதிய பெயர்களை சேர்க்கவும், திருமணமானவர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்கம் செய்யவும், செல்போன் எண்ணை மாற்றம் செய்ய வசதியாக நேற்று காலை, வட்ட வழங்கல் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது. சிவகாசி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமை தாசில்தார் லட்சம் தொடங்கி வைத்தார். இதில் ரேசன் கார்டுகளில் உள்ள பிழைகளை சரி செய்ய 32 பேரும், நகல் ரேசன் கார்டு கேட்டு 5 பேர் உள்பட 91 பேர் மனு கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்ட வழங்கல் அலுவலர் கோதண்டராமன் தெரிவித்தார்.
Advertisement
Advertisement