டூவீலர் மீது கார் மோதி ஆசிரியர் பலி
ராஜபாளையம் டிச. 12. ராஜபாளையம் அருகே டூவீலர் மீது கார் மோதி ஓய்வுபெற்ற ஆசிரியர் உயிரிழந்தார் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் வின்சென்ட்(80). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ராஜபாளையம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். கோதை நாச்சியார் புரம் விலக்கு பகுதியில் வேகமாக வந்து கொண்டிருக்கும் பொழுது சாலையில் இருந்து ஒரு கார் வலது புறமாக திரும்பியது. இதில் கார் மீது மோதியதில் வின்சென்ட் பலத்த காயங்களுடன் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காரை ஓட்டி வந்த அரவிந்த் குமார்(27) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து ராஜபாளையம் வடக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Advertisement
Advertisement