புதிய சப்-கலெக்டர் சிவகாசியில் பதவியேற்பு
சிவகாசி, ஆக.12: சிவகாசியில் புதிய சப்-கலெக்டர் பதவியேற்றார். சிவகாசியில் பொறுப்பு ஆர்டிஓவாக பாலாஜி பணியாற்றி வந்தார். சிவகாசி சப் -கலெக்டராக முகமது இர்பான் என்பவரை தமிழக அரசு நியமனம் செய்தது. இந்நிலையில் புதிய சப் கலெக்டர் முகமது இர்பான் முறைப்படி நேற்று காலை பதவி ஏற்று கொண்டார்.
அவருக்கு சிவகாசி தாசில்தார் லட்சம் மற்றும் வருவாய்த்துறையினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 2022 பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியான முகமது இர்பான், அரசின் நலத்திட்டங்கள் சிவகாசி மக்களுக்கு முறையாக கிடைத்திட பணியாற்றுவேன் என தெரிவித்தார்.