செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்: அசோகன் எம்எல்ஏ பங்கேற்பு
சிவகாசி, ஆக.12: செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்த முகாம்களில், மகளிருக்கான உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களுக்கு வெறும் பத்து நிமிடங்களில் அனைத்து பணிகளும் முடித்துத் தரப்படுகின்றன. இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. பிடிஓ மீனாட்சி தலைமை வகித்தார். தாசில்தார் லட்சம் முன்னிலை வகித்தார். அசோகன் எம்எல்ஏ, முன்னாள் யூனியன் தலைவரும் சிவகாசி திமுக ஒன்றிய செயலாளருமான விவேகன்ராஜ், சிவகாசி சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளர் சென்பகவிநாயகம், செங்கமலநாச்சியார்புரம் பாண்டீஸ்வரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனு வாங்கினர்.