சிவகாசியில் விசிக ஆர்ப்பாட்டம்
சிவகாசி, ஆக. 3: ஆணவப் படுகொலையைக் கண்டித்து சிவகாசியில் விசிக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லையில் நடைபெற்ற ஆணவப் படுகொலையைக் கண்டித்து சிவகாசி மாநகர மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகாசி மாநகர மாவட்ட செயலாளர் செல்வின் ஏசுதாஸ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஆணவப் படுகொலையை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும், கவின் செல்வகணேஷ் குடும்பத்திற்கு அரசு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியில் வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும் உட்பட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில், கட்சி நிர்வாகிகள் மாரீஸ்வரன், செல்வா, நவமணி, திலீபன், தலித்ராஜா, மனிதநேயம், செல்வக்குமார், லில்லி ராஜன்,அசோக் குமார்,தமிழ்ச்செல்வன்,பைக் பாண்டியன் மற்றும், மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.