வத்திராயிருப்பு அருகே கண்மாய்களில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
வத்திராயிருப்பு, செப்.2: வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி எஸ்.கொடிக்குளம் கண்மாய் மற்றும் விராகசமுத்திரம் கண்மாயில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன. வில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகம் வத்திராயிருப்பு வனச்சரகம் சார்பில், மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள எஸ்.கொடிக்குளம் கண்மாய் மற்றும் விராக சமுத்திரம் கண்மாயில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு வனச்சரகர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். இதில் எஸ்.கொடிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் கண்மாயில் இருந்து சேகரிக்கப்பட்ட 15 மூட்டை பிளாஸ்டிக் குப்பைகள் மறுசுழற்சி செய்வதற்காக கொடிக்குளம் பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை தோட்டத்தில் ஒப்படைப்பு செய்யப்பட்டது.