முதியவரிடம் பணம் பறித்த வாலிபர் கைது
ரெட்டிச்சாவடி அக். 28: கடலூர் முதுநகர் அடுத்த மணகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (55). பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்பனை செய்து வருபவர். சம்பவத்தன்று வேல்முருகன் வண்டிபாளையம் அம்மன் கோயில் வழியாக தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்ற 2 வாலிபர்கள் வேல்முருகன் சென்ற மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.2 ஆயிரத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர் இதுகுறித்து வேல்முருகன் கொடுத்த புகாரின்பேரில் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வேல்முருகனிடம் பணம் பறித்த அதே பகுதியைச் சேர்ந்த தாமோதரன் (19), மனோதீபன் என்பது தெரிய வந்தது. இதையடுத்த தாமோதரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் தப்பி ஓடிய மனோதீபனை போலீசார் வீசி தேடி வருகின்றனர்.