வீட்டின் முன்பு விளையாடிய சிறுவனை கடித்த வெறிநாய்
நெய்வேலி, அக். 28: நெய்வேலி வடக்குத்து சக்தி நகரை சேர்ந்தவர் மோகன் கவின்ராஜ் (7). இவர் வடக்குத்து நகரில் உள்ள முல்லை மழலையர் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கவின்ராஜ் தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது சாலையில் இருந்த வெறி நாய் திடீரென கவின்ராஜை துரத்தி வந்து கடித்தது. இதில் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் கவின்ராஜ் வீட்டிற்கு வந்து நடந்த சம்பவம் குறித்து தாயிடம் தெரிவித்தார். தொடர்ந்து சிறுவனுக்கு வடக்குத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். வடக்குத்து பகுதியில் சிறுவனை நாய் துரத்தி கடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Advertisement
Advertisement