தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குடும்ப டாக்டர் போல் மெசேஜ் அனுப்பி பணம் பறிப்பு லாட்டரி சீட்டு விழுந்து இருப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.7 லட்சம் மோசடி

புதுச்சேரி, நவ. 26: புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த ஆண் நபருக்கு அவரது குடும்ப டாக்டர் அனுப்புவது போல் வாட்ஸ்அப்பில் மர்ம நபர் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில் அவசர தேவைக்காக ரூ.65 ஆயிரம் பணம் தேவைப்படுவதாகவும், உடனடியாக அனுப்பி வைக்குமாறும் கூறப்பட்டுள்ளது. இதனை உண்மை என நம்பிய ஆண் நபர், மேற்கண்ட பணத்தை அனுப்பியுள்ளார். அதன்பிறகே அவருக்கு இது மோசடி வேலை என தெரியவந்தது. இதேபோல், முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த பெண்ணின் வங்கிக் கணக்கில் அவருக்கு தெரியாமலேயே ரூ.7,452ஐ மர்ம நபர் எடுத்துள்ளனர். பிள்ளைச்சாவடி பகுதியை சேர்ந்த ஆண் நபர், உலர்பழம், நட்ஸ் வகைகளை வாட்ஸ்அப்பில் வந்த விளம்பரத்தை பார்த்து ரூ.16,830ஐ அனுப்பி ஏமாந்துள்ளார். சாரம் பகுதியை சேர்ந்த ஆண் நபர், ஆண்லைன் தளத்தில் வந்த விளம்பரத்தை பார்த்து லேப்டாப் ஆர்டர் செய்து ரூ.42 ஆயிரம் ஏமாந்துள்ளார். மணவெளி பகுதியை சேர்ந்த ஆண் நபர் லோன் ஆப் மூலம் கடன் பெற்று, அதை திரும்ப செலுத்திய பிறகும் மேற்கொண்டு பணம் கேட்டு மார்பிங் போட்டோ அனுப்பி ரூ.4,500ஐ மர்ம நபர் பறித்துள்ளார்.

Advertisement

இதேபோல் தவளக்குப்பம் பகுதியை சேர்ந்த பெண்ணிடம் தனியார் நிதிநிறுவன லோன் அதிகாரி போல் பேசி ரூ.1 லட்சம் கடனை குறைந்த வட்டியில் தருவதாகவும், அதற்கு செயல்முறை கட்டணம் என்று கூறியும் ரூ.27,800ஐ மர்ம நபர் மோசடி செய்துள்ளார். கரியமாணிக்கம் பகுதியை சேர்ந்த ஆண் நபரின் செல்போனுக்கு பணம் கிரெடிட் ஆவது போல் மெசேஜ் அனுப்பி, அதன் மூலமாக அவரிடம் வங்கி தகவல்களை பெற்று, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.35 ஆயிரத்தை மர்ம நபர் ஏமாற்றியுள்ளார். இதேபோன்று, பாகூரை சேர்ந்த பெண், பேஸ்புக்கில் கேரள லாட்டரி டிக்கெட் விளம்பரத்தை பார்த்து ரூ.40 செலுத்தியுள்ளார். பின்னர், லாட்டரி ஏஜெண்ட் எனக்கூறி அந்த பெண்ணை தொடர்பு கொண்டு, உங்களுக்கு லாட்டரி சீட்டு விழுந்து இருப்பதாகவும், அதற்கு செயல்முறை கட்டணம், ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டும் எனக்கூறி ரூ.7.08 லட்சத்தை பறித்துள்ளனர். மேற்கண்ட பாதிக்கப்பட்ட 3 பெண்கள் உள்பட 8 பேர், இணைய மோசடிகள் மூலம் ரூ.9 லட்சம் ஏமாந்துள்ளனர். இது குறித்த அளித்த புகார்களின்பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement