நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமிக்கு முதல்வர் செல்போனில் வாழ்த்து
வேப்பூர், நவ. 22: திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று கடலூர் மேற்கு மாவட்டம் நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமியை தொலைபேசியில் அழைத்து பேசினார். அப்போது பேசிய முதலமைச்சர், ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமியிடம் நலமாக இருக்கிறீர்களா என்று நலம் விசாரித்தார். அதற்கு பதிலளித்து நலமாக இருப்பதாக கூறி முதலமைச்சரிடம் நலம் விசாரித்தார். இதையடுத்து பேசிய முதலமைச்சர் நல்லூர் வடக்கு ஒன்றிய திமுக எஸ்ஐஆர் பணிகளை சிறப்பாக செய்து 40 சதவீதத்துக்கு மேல் நிறைவு செய்துள்ளதை எடுத்துக் கூறி வாழ்த்தி பாராட்டினார். மேலும் தொடர்ந்து எஸ்ஐஆர் பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் எனக் கூறினார். ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமியிடம் முதலமைச்சர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நிகழ்வு அவரையும், அவரது குடும்பத்தினர் மற்றும் நல்லூர் வடக்கு ஒன்றிய திமுகவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து திமுகவின் பல்வேறு பொறுப்பாளர்கள் ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமியை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தனர்.