கல்லூரி மாணவர்களை மிரட்டி பணம் பறித்த காவலர் பணியிடை நீக்கம் மாவட்ட எஸ்பி நடவடிக்கை
நெய்வேலி, அக். 17: கல்லூரி மாணவர்களை மிரட்டி ரூ.1.30 லட்சம் பறித்த காவலரை பணியிடை நீக்கம் செய்து எஸ்பி ஜெயக்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலைய முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தவர் பூவராகவன். இவர் டவுன்ஷிப் பகுதியில் புகை பிடித்த கல்லூரி மாணவர்களை பிடித்து, கஞ்சா வழக்கு போட்டு விடுவேன் என மிரட்டி, அவர்களிடமிருந்து ரூ.1,30,000 பணம் பறித்துள்ளார். இதுகுறித்து கல்லூரி மாணவர்கள் அளித்த புகாரின் பேரில், முதல் நிலை காவலர் பூவராகவனை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் காவலர் பூவராகவன் கடந்த 2023ம் ஆண்டு விருத்தாசலத்தில் குட்கா வழக்கில் சம்மந்தப்பட்டு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement