லாரி டிரைவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட திருநங்கைக்கு 2 ஆண்டு சிறை சார்பு நீதிமன்றம் தீர்ப்பு
உளுந்தூர்பேட்டை, அக்.17: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மேட்டத்தூர் கிராம தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கடந்த 2013ம் ஆண்டு அந்த வழியாக சென்ற ஒரு லாரியை வழிமறித்து கும்பகோணத்தை சேர்ந்த லாரி டிரைவர் சுரேஷ் (25) என்பவரிடம் ரூபாய் 7500 வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதாக திருநாவலூர் காவல் நிலையத்தில் சுரேஷ் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை அருகே வண்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இளவஞ்சி (35) என்ற திருநங்கை மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு உளுந்தூர்பேட்டை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில் நேற்று சார்பு நீதிமன்ற நீதிபதி ஆறுமுகம் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட திருநங்கை இளவஞ்சிக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
Advertisement
Advertisement