அரசு நிதி உதவிபெறும் பள்ளியில் காலை உணவில் பல்லி 3 குழந்தைகள் மயக்கம்
செஞ்சி, அக்.17: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த சிங்கவரம் கிராமத்தில் அரசு நிதியுதவி பெரும் பள்ளி இயங்கிவருகிறது. இப்பள்ளியில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை உணவு சாப்பிட்ட சில மாணவிகள் உணவில் பல்லி இருப்பதை கண்டுள்ளனர். இதனால் உணவு சாப்பிட்ட 7,8,9, வயது 3 குழந்தைகள் தங்களுக்கு மயக்கம் வருவதாக தெரிவிக்கவே அவர்களை செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு பிறகு நலமுடன் அவர்கள் வீடு திரும்பினர். இச்சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) இந்திராதேவி, செஞ்சி வட்டார வளர்ச்சி அலுவலர் நடராசன், சத்துணவு மேலாளர் பற்குணன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை செய்தனர்.
Advertisement
Advertisement