மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.98 லட்சம் வசூல்
மேல்மலையனூர், அக். 16: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. இங்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். மேலும் அமாவாசை தினத்தில் லட்சக்கணக்கான மக்கள் ஒரே நாளில் கூடி அம்மன தரிசனம் செய்வது இத்திருக்கோயிலின் சிறப்பம்சமாகும். இந்நிலையில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அம்மனைடம் வேண்டுதலுக்காக காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி இருந்தனர்.
இதையடுத்து நேற்று கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் ரொக்கம் 98,63,347ம், 120 கிராம் தங்கம், 920 கிராம் வெள்ளி உள்ளிட்டவர்களை பொதுமக்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இந்நிகழ்வில் கோயில் உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் சேட்டு (எ) ஏழுமலை மற்றும் அறங்காவலர்கள்சுரேஷ், மதியழகன், பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம் மற்றும் மேற்பார்வையாளர் பாக்கியலட்சுமி, ஆய்வாளர் சங்கீதா, மேலாளர் சதீஷ், காசாளர் மணி மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்துகொண்டனர். மேல்மலையனூர் காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.