பேட்டரி திருடிய 2 பேர் கைது
பண்ருட்டி, டிச. 13: கடலூர் சிப்காட் குடிகாடு லாடசாமி கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர் ரொட்டி (எ) பிரசாத்(31).காரைக்காடு -சிதம்பரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (56). இருவரும் பண்ருட்டி அடுத்துள்ள புதுப்பாளையம் செல்போன் டவரில் அமைக்கப்பட்டிருந்த பேட்டரிகளை திருடிய வழக்கில் தேடப்பட்டு வந்தனர். இந்த நிலையில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார், டிஎஸ்பி டீம் போலீசார் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசில் சிக்கினர். இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்தனர்.
Advertisement
Advertisement