பரங்கிப்பேட்டை அருகே தூக்குபோட்டு வாலிபர் சாவு
புவனகிரி, நவ. 13: பரங்கிப்பேட்டை அருகே உள்ள கரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தமிழ்ச்செல்வன்(34). இவர் சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் கம்ப்யூட்டர் சென்டரில் வேலை செய்து வந்தார். இவருக்கு தைராய்டு நோய் இருந்ததால் மன வருத்தத்திலும், மன உளைச்சலும் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முத்தமிழ்ச்செல்வன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி பத்மினி பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement