என்னை மீறி திருமணம் செய்தால் ஒன்றாக இருந்த போட்டோவை வெளியிடுவதாக காதலிக்கு மிரட்டல்
விழுப்புரம், ஆக. 12: வேறொருவரை திருமணம் செய்தால் ஒன்றாக இருந்த புகைப்படத்தை வெளியிடுவேன் என்று முன்னாள் காதலிக்கு மிரட்டல் விடுத்த காதலன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
நடத்தி வருகின்றனர். விழுப்புரம் அருகே வளவனூர் காவல் நிலையத்துக்குட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்தவர் மாதவரராஜா (29). இவரும், அதே கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் மாதவரராஜா கடந்த 2023ம் ஆண்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் அவர் காதலித்து வந்த பெண்ணின் குடும்பத்தினர் வேறொரு இடத்தில் திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்த்து திருமண ஏற்பாடு செய்துள்ளனர். இதனை அறிந்த மாதவரராஜா முன்னாள் காதலியிடம் சென்று நீ திருமணம் செய்து கொள்ளக்கூடாது. அப்படி செய்து கொண்டால் நாம் சேர்ந்து இருந்த போட்டோவை வெளியிட்டு விடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், வளவனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார், மாதவரராஜா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.