ராமநத்தம் அருகே சிலிண்டர் வெடித்து வீடு சேதம் தீக் காயங்களுடன் உயிர் தப்பிய மூதாட்டி
திட்டக்குடி, நவ. 11: கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை அடுத்துள்ள தொழுதூர் கிராமத்தை சேர்ந்த ராமர் மனைவி பெருமாயி (62). இவர் நேற்று வயலில் கூலி வேலைக்கு சென்று விட்டு மதியம் வீட்டிற்கு வந்து சமைப்பதற்காக கேஸ் சிலிண்டரை பற்ற வைத்துள்ளார். அப்பொழுது வீட்டில் இருந்த மற்றொரு சிலிண்டரில் இருந்து கேஸ் கசிவு ஏற்பட்டு வீடு முழுவதும் கேஸ் நிரம்பியது. அப்போது மூதாட்டி அடுப்பை பற்ற வைக்கும்பொழுது கேஸ் வெடித்து சிதறியது. இதில் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் சேதமானது. இதில் அதிர்ஷ்டவசமாக மூதாட்டி தீக்காயங்களுடன் உயிர் தப்பினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராமநத்தம் போலீசார் மூதாட்டியை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement