போதையில் தாய் மீது தாக்குதல் பாசக்கார மகன் மீது போலீஸ் வழக்குப்பதிவு
விழுப்புரம், நவ. 11: விழுப்புரம் அருகே குடிபோதையில் தாயை சரமாரியாக தாக்கிய பாசக்கார மகன் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் ஊரல் கரைமேடு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (40). கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமான நிலையில் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் தினமும் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வருவாராம். போதையில் தாய் பவுனம்பாள் (60) என்பவரை திட்டி வருவதுடன் சரமாரியாக தாக்கி வந்துள்ளார். நேற்று போதையில் வீட்டுக்கு வந்தவர் தாய் என்றும் பாராமல் பவுனம்பாளை சரமாரியாக தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்து பவுனம்பாள் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர காவல் நிலைய போலீசார், பாலாஜி மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement