பண்ருட்டி அருகே பெண்ணையாற்றில் மூழ்கி சிறுவன் மாயம் தேடும் பணி தீவிரம்
பண்ருட்டி, அக். 11: பண்ருட்டி அருகே ஆற்றில் மூழ்கிய சிறுவனை தீயணைப்பு படையினர் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்துள்ள கட்டமுத்துபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 4 பேர், நேற்று பிற்பகல் கண்டரக்கோட்டைக்கு வந்தனர். மாலை நேரத்தில், கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் வீராணம் பாலம் அருகே மணல் எடுத்த பள்ளத்தில் குளிக்க இறங்கினர். இதில் ஆழமான பகுதியில் சிக்கிய கட்டமுத்துபாளையம் தீனதயாளன் மகன் வேலன்(18) என்பவர் நீரில் மூழ்கினார். இது பற்றி தகவல் அறிந்த பண்ருட்டி போலீசார் மற்றும் பண்ருட்டி தீயணைப்பு துறையினர் சென்று நீரில் மூழ்கி மாயமான வேலனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
Advertisement