14 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் புதுச்சேரி வாலிபர் போக்சோவில் கைது சேலம் மகளிர் போலீசார் அதிரடி
சேலம், டிச. 7: சேலத்தில் 14 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட புதுச்ேசரி அரசியல் கட்சி பிரமுகரை, சேலம் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்தனர். புதுச்சேரி மாநிலம் புளியந்தோப்பு, தொண்டமாநத்தம் 3வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (38). அரசியல் பிரமுகர். வியாபாரம் செய்து வருகிறார். இவரும், சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களும் குடும்ப நண்பர்களாக பழகி வந்தனர். இவர்களின் மகளான 14 வயது சிறுமி, 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மே மாதம் முதல் பாலமுருகன் அந்த சிறுமியிடம் செல்போனில் பேசி வந்துள்ளார். அச்சிறுமியை அவர் பாலியல் ரீதியில் வீடியோகாலில் டார்ச்சர் செய்து வந்துள்ளார். ேமலும் அவரது படத்தை அச்சிறுமியின் நெஞ்சில் பச்சை குத்தவைத்து கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்த தகவல் சூரமங்கலம் மகளிர் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பாலமுருகன் அந்த சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர். அதே நேரத்தில் சாமிநாயக்கன்பட்டியை சேர்ந்த ஹரிஹரசுதன் (38) என்பவரும் சிறுமியிடம் அத்துமீறியது தெரியவந்தது. அவரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி இருவரையும் சிறையில் அடைத்தனர்.