மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலி விவசாயி கைது
விக்கிரவாண்டி, நவ. 5: விக்கிரவாண்டி அருகே காட்டு பன்றிக்காக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலியானார். செஞ்சி வட்டம் கீழ் வையலாமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பலராமன்(48). கூலி தொழிலாளி. இவர் கடந்த 1ம் தேதி அன்று மாலை 6 மணி அளவில் மில்டன் என்பவரது நிலத்தின் வழியாக சென்றபோது மணிலா பயிர் சாகுபடி நிலத்தில் காட்டு பன்றிக்காக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் எதிர்பாராதவிதமாக சிக்கி இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து மின் வேலி அமைத்த நிலத்தை குத்தகைக்கு பயிரிட்ட கல்லடி குப்பத்தைச் சேர்ந்த லட்சுமணன்(37) என்பவரை கைது செய்தனர்.
Advertisement
Advertisement