கிணற்றில் தவறி விழுந்து ஏழாம் வகுப்பு மாணவன் சாவு
உளுந்தூர்பேட்டை, ஜூலை 1: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி அன்னை சத்யா தெருவில் வசித்து வருபவர் பாலாஜி. இவருடைய மகன் ஹரிபிரசாத் (12) என்பவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து விளையாடிக் கொண்டிருந்தவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் இறங்கி கால் கழுவ முயன்றபோது தவறி கிணற்றில் விழுந்துள்ளார். இதில் மூச்சுத் திணறி தண்ணீரில் கிடந்த மாணவனை அங்கிருந்தவர்கள் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்ததில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பிரித்தா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.