இலவச வீட்டுமனை பட்டா வழங்குக கிராம மக்கள் மனு
விருதுநகர், ஜூலை 15: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் காரியாபட்டி ஒன்றியம் பாம்பாட்டி ஊராட்சி பணிக்கனேந்தல் கிராம மக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில், காரியாபட்டி ஜெகஜீவன்ராம் காலனியில் 250 ஆதிதிராவிட குடுமபங்களும், பனிக்கனேந்தல் கிராமத்தில் 80 ஆதிதிராவிடர் குடும்பங்களும் வசித்து வருகின்றனர். இதில் 150 குடும்பத்தினர் தினக்கூலிகளாக சொந்த வீடு இல்லாமல் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர்.
ஜெகஜீவன்ராம் காலனி மற்றும் பனிக்கனேந்தல் கிராம ஆதிதிராவிட குடும்பத்தினருக்கு 6.30 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்து 130 பயனாளிகளுக்கு ஒப்படைப்பு செய்யப்பட்டது. வருவாய்த்துறை உத்தரவின்படி கடந்த பிப்.8ம் தேதி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இ-பட்டா வழங்கினார். இ-பட்டா பெற்ற 48 பயனாளிகள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். மீதமுள்ள 76 பிளாட்டுகளை இலவவச பட்டாவாக வழங்க வேண்டும் என அளித்த மனு நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து இலவச பட்டா வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.