மாடி தோட்டத்திற்கான மானிய தொகுப்பு விஜய் வசந்த் எம்பி வழங்கினார்
நாகர்கோவில், செப். 13: தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை மூலம் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாடி தோட்டத்திற்கான மானிய தொகுப்பு அகஸ்தீஸ்வரம் தாலுகாவை சேர்ந்த 2 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. மாடி தோட்டத்திற்கான தொகுப்பை விஜய் வசந்த் எம்பி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தோட்டக்கலை துணை இயக்குநர் ஷீலா ஜான், உதவி இயக்குநர் ஆறுமுகம், தோட்டக்கலை அலுவலர் ஷிமாஞ்சனா, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் அஜின், ஜெனிலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement