பள்ளி அருகே குட்கா விற்ற வியாபாரி கைது
சேலம், ஜூலை 12: சேலம் கோட்டை-செவ்வாய்பேட்டை மெயின் ரோட்டில் தனியார் பள்ளி அருகில் இருக்கும் பெட்டிக்கடையில் குட்கா உள்ளிட்ட போதை புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதன்பேரில் செவ்வாய்பேட்டை போலீஸ் எஸ்ஐ தமிழ்மணி தலைமையிலான போலீசார், அந்த பெட்டிக்கடையில் சோதனையிட்டனர். அதில், அக்கடையில் ₹2,400 மதிப்புள்ள ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, அதனை விற்று வந்த செவ்வாய்பேட்டை அக்ரஹாரம் தெருவை சேர்ந்த பனராம் (26) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில் வியாபாரி பனராமை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
Advertisement
Advertisement