ரேஷன் விற்பனையாளர்கள் புகார்களின்றி பணியாற்ற வேண்டும் பயிற்சி வகுப்பில் டிஆர்ஓ அறிவுரை வேலூர் மாவட்டத்தில் புதிதாக தேர்வான
வேலூர், ஆக.30: வேலூர் மாவட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ரேஷன் கடை சேல்ஸ்மேன்கள், கட்டுனர்கள் பணியின்போது எவ்வித புகாருக்கும் இடமின்றி பணியாற்ற வேண்டும் என்று டிஆர்ஓ மாலதி பேசினார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பணியாற்றுவதற்கு புதிதாக 76 விற்பனையாளர்கள், 26 கட்டுநர்கள் கடந்த மாதம் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கான பயிற்சி வகுப்பு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருகுணஐயப்பதுரை தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக டிஆர்ஓ மாலதி கலந்து கொண்டு பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசியதாவது: இந்த பயிற்சி வகுப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி கையேட்டை படித்து அதன் விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் அனைவரும் கடையை குறிப்பிட்ட நேரத்திற்குள் திறக்க வேண்டும். சிலர் பகுதிநேர கடைக்கு செல்லும் போது எப்போது செல்கிறீர்கள் என்ற விவரத்தை கடையில் எழுதி வைக்க வேண்டும். பொதுமக்களிடம் இருந்து புகார்கள் ஏதும் வராமல் பணியாற்ற வேண்டும். கடையில் வைக்கப்பட்டுள்ள பொருட்களை பொதுமக்களுக்கு சரியாக விநியோகிக்க வேண்டும்.
தற்போது முதல் அமைச்சரின் தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் முன்கூட்டியே பயனாளிகளுக்கு தெரிவித்து வீடுகளுக்கு சென்று பொருட்கள் விடுபடாமல் வழங்க வேண்டும். பணி சந்தேகங்களை பயிற்சியில் கேட்டு நிவர்த்தி செய்து பொதுமக்களுக்கு சிறந்த சேவை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து ‘பாயிண்ட் ஆப் சேல்ஸ்’ கருவியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து செயல் விளக்க பயிற்சி வழங்கப்பட்டது. முன்னதாக பயிற்சி குறித்த கையேடும் வெளியிடப்பட்டது.
முக்கிய பிரமுகர்கள் பேசினர். தொடர்ந்து புறப்பட்ட விநாயகர் விஜர்சன ஊர்வலம் கோட்டை சுற்றுச்சாலை, சேண்பாக்கம், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக நேற்று மாலை 5 மணியளவில் சதுப்பேரியை அடைந்தது. அங்கு ஊர்வலத்தில் கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. அதேபோல் கொணவட்டம் பகுதியில் உள்ள 10 சிலைகள் மேளதாளம் முழங்க விஜர்சன ஊர்வலத்தில் பங்கேற்றன. அங்கிருந்து மாங்காய் மண்டி வழியாக சர்வீஸ் சாலை சென்று, அங்கிருந்து சதுப்பேரியை சென்றடைந்து சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டன. இதனையொட்டி வழியெங்கிலும் பக்தர்கள் மலர்தூவி, நடனமாடி மகிழ்ந்தனர். விநாயகர் விஜர்சன ஊர்வல பாதுகாப்பில் எஸ்பி மயில்வாகனன் தலைமையில் ஏஎஸ்பி தனுஷ்குமார், ஏடிஎஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள் ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐகள், ஊர்க்காவல் படையினர், சிறப்பு அதிரடிப்படையினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர்.