எஸ்எஸ்ஐக்கள் உள்பட 9 பேர் டிரான்ஸ்பர் எஸ்பி மயில்வாகனன் உத்தரவு வேலூர் மாவட்டத்தில்
வேலூர், நவ.28: வேலூர் மாவட்டத்தில் எஸ்எஸ்ஐக்கள் உள்பட 9 பேர் பணியிட மாற்றம் செய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் எஸ்ஐ, தலைமை காவலர்கள் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்து எஸ்பி மயில்வாகனன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி வேலூர் வடக்கு காவல் நிலைய காவலர் நிசர்அகமத்-அரியூர் காவல் நிலையத்திற்கும், சத்துவாச்சாரி போக்குவரத்து எஸ்எஸ்ஐ ஜெயகுமார், அதே காவல் நிலையத்திலும், வேலூர் வடக்கு காவல் நிலைய தலைமை காவலர் சூரியபிரகாஷ், சத்துவாச்சாரி போக்குவரத்து காவல் நிலையத்திற்கும், வேலூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் கிரேடு-1 காவலரான கஜேந்திரன், விரிஞ்சிபுரம் காவல் நிலையத்திற்கும், வேலூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் பெண் காவலர் ஜீவிதா, காட்பாடி போக்குவரத்து காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் போக்குவரத்து காவல் நிலைய எஸ்எஸ்ஐ சங்கர், சத்துவாச்சாரி போக்குவரத்து காவல் நிலையத்திற்கும், சத்துவாச்சாரி காவல் நிலைய பெண் காவலர் ஆஷா, பிரம்மபுரம் காவல் நிலையத்திற்கும், வேலூர் போக்குவரத்து காவல் நிலைய எஸ்எஸ்ஐ ராஜேந்திரன், காட்பாடி போக்குவரத்து காவல் நிலையத்திற்கும், குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலைய எஸ்எஸ்ஐ வேண்டா, குடியாத்தம் போக்குவரத்து காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்து எஸ்பி மயில்வாகனன் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார்.