மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் வேலூர் மாவட்டத்தில் நாளை முதல்
வேலூர், நவ.25: வேலூர் மாவட்டத்தில் நாளை முதல் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து பிறப்பு முதல் 18 வயதுள்ள மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்கள் நாளை கணியம்பாடி, வேலூர் புறநகர் மற்றும் வேலூர் நகர் ஒன்றியங்களுக்கு வேலூர் அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியிலும், அணைக்கட்டு ஒன்றியத்திற்கு அணைக்கட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் வரும் 28ம் தேதியும், காட்பாடி மற்றும் கே.வி.குப்பம் ஒன்றியங்களுக்கு காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரும் 1ம் தேதியும், குடியாத்தம் மற்றும் பேர்ணாம்பட்டு ஒன்றியங்களுக்கு குடியாத்தம் அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் வரும் 2ம் தேதி முகாம்கள் நடைபெற உள்ளது. எனவே, மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் முகாம்களில் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.