தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக்குழுவினர் ஆய்வு வேலூர் மாவட்டத்தில் நாளை
வேலூர், செப்.25: வேலூர் மாவட்டத்தில் நாளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக்குழுவினர் ஆய்வு செய்ய உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக்கணக்கு குழுவின் தலைவர் செல்வபெருந்தகை மற்றும் குழு உறுப்பினார்களான காந்திராஜன், ஏ.பி.நந்தகுமார், அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, அப்துல்சமத், ராமசந்திரன், எழிலரசன், ஐயப்பன், சந்திரன், சரஸ்வதி, சிவக்குமார்(எ)தாயகம் கவி, செந்தில்குமார், சேகர், நத்தம்.விஸ்வநாதன், பழனியாண்டி, முகம்மது ஷாநவாஸ், ஜெயராமன் ஆகியோர்களை கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொது கணக்கு குழு (2024-26) வேலூர் மாவட்டத்தில் நாளை தணிக்கை பத்திகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இக்குழுவானது இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத்தலைவரின் 2015 முதல் 2022-2023 வரையிலான ஆண்டுகளுக்கான அறிக்கைகளில் உள்ள வேலூர் மாவட்டத்தை சார்ந்த தணிக்கை பத்திகள் குறித்து மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர். மேலும் திட்டப்பணிகள் சிலவற்றையும், பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.