பஸ்சில் 7 கிலோ குட்கா கடத்தி வந்த வாலிபர் கைது ஆந்திராவில் இருந்து
வேலூர், அக்.24: ஆந்திராவில் இருந்து பஸ்சில் 7 கிலோ குட்கா கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் காட்பாடி போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திரா மாநிலம் சித்துாரில் இருந்து வேலூர் நோக்கி பஸ் வந்து வந்தது. அந்த பஸ்சை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில், சந்தேகம் அளிக்கும் வகையில் அமர்ந்திருந்த நபரின் பையை சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட 7 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் திருவமண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார்(37) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரஞ்சித்குமாரை கைது செய்தனர். மேலும், 7 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
Advertisement
Advertisement