டிவி திருடிய வாலிபர் கைது
வேலூர், செப்.22: வேலூரில் டிவி திருடிண ஒசூர் வாலிபரை போலீசார் கைது செய்தனர். வேலூர் அடுத்த வடவிரிஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் நவீன்குமார்(22). இவர் நேற்று முன்தினம் தனது நண்பரிடம் இருந்து டிவி விலைக்கு வாங்கியுள்ளார். பின்னர் டிவியை இருசக்கர வாகனத்தில் வைத்துவிட்டு நண்பருடன் சேர்ந்து பாகாயம் பகுதியில் உள்ள கடையில் டீ குடித்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது டிவியை காணவில்லை. யாரோ மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது.
Advertisement
இதுகுறித்து பாகாயம் போலீசில் நவீன்குமார் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதியை சேர்ந்த துரைபாண்டியன் என்கிற சூர்யா(21) என்பவர் டிவியை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யாவை கைது செய்தனர். டிவியை பறிமுதல் செய்தனர்.
Advertisement