தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராணுவ வீரர் கண்ணெதிரே ரயிலில் சிக்கி தலை துண்டாகி மனைவி பலி காட்பாடியில் வழியனுப்ப வந்தபோது சோகம் ஐடி கார்டு கொடுக்க ஓடிச்சென்று தண்டவாளத்தில் விழுந்தார்

வேலூர், ஆக.21: காட்பாடி ரயில் நிலையத்தில் வழியனுப்ப வந்தபோது, ஐடி கார்டு கொடுக்க ஓடிச்சென்று தண்டவாளத்தில் விழுந்து, ராணுவ வீரர் கண்ணெதிரே ரயிலில் சிக்கி தலை துண்டாகி மனைவி பலியானார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டம் பொய்கை கிராமம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன்(36), ராணுவ வீரர். இவரது மனைவி சித்ரா(32). தம்பதிக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகியுள்ளது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை உள்ளன. பிரபாகரன் விடுமுறையில் செகந்திராபாத்தில் இருந்து தனது சொந்த ஊருக்கு சில நாட்களுக்கு முன் வந்தார். விடுமுறை முடிந்து வேலைக்கு செல்ல நேற்று முன்தினம் காட்பாடி ரயில் நிலையத்திற்கு புறப்பட்டார். அப்போது அவரது மனைவி சித்ரா(வும் அவருடன் காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தார். சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பிரபாகரன் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்.

Advertisement

நேற்றுமுன்தினம் இரவு 10 மணிக்கு சபரி எக்ஸ்பிரஸ் ரயில் காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது பிரபாகரன் ரயிலில் ஏறினார். இந்நிலையில் ஐடி கார்டு தன்னிடம் இருப்பதை சித்ரா தாமதமாக அறிந்துள்ளார். அப்போது ரயில் புறப்பட்ட நிலையில், சித்ரா கணவரை அழைத்தபடி ஓடிச்சென்று அவரிடம் அடையாள அட்டையை கொடுக்க முயன்றார். அப்போது சித்ரா வின் கை ரயிலில் பட்டதால் தவறி தண்டவாளத்தில் விழுந்தார். அந்த ரயில் சக்கரம் ஏறியதில் சிந்துவின் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

அப்போது இதைக்கண்ட பிரபாகரன் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார். பின்னர் கீழே இறங்கி ஓடி வந்து மனைவியின் சடலத்தை பார்த்து கதறி அழுதார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிந்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கண்ணெதிரே தலை துண்டாகி மனைவி உயிரிழந்ததை பார்த்து கணவன் கதறி அழுத சம்பவம் பயணிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisement