விசாகப்பட்டினம்- கொல்லம் சபரிமலை சிறப்பு ரயில் ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இன்று முதல்
வேலூர், நவ.18: விசாகப்பட்டினம்- கொல்லம் இடையே காட்பாடி, ேஜாலார்பேட்டை, சேலம் வழியே சபரிமலை சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழா தொடங்கி உள்ளது. இந்நிலையில், கார்த்திகை மாதம் 1ம் தேதியான நேற்று ஏராளமான பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். நாடு முழுவதும் இருந்து ஐயப்ப பக்தர்கள், யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். ஐயப்ப பக்தர்கள் சபரிமலை செல்ல வசதியாக ரயில்வே நிர்வாகம், முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு ரயில்களை இயக்குகிறது. இந்தவகையில் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கொல்லத்திற்கு காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம் வழியாக 3 மாத காலத்திற்கு சபரிமலை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இதன்படி, விசாகப்பட்டினம்-கொல்லம் சிறப்பு ரயில் (08539) இன்று (18ம் தேதி) முதல் ஜனவரி 20ம் தேதி வரை செவ்வாய்க்கிழமை தோறும் (10 சேவை) இயக்கப்படுகிறது. விசாகப்பட்டணத்தில் காலை 8.20 மணிக்கு புறப்பட்டு, சாமல்கோர்ட், ராஜமுந்திரி, விஜயவாடா, நெல்லூர், ரேணிகுண்டா, காட்பாடிக்கு நள்ளிரவு 23.15 மணிக்கு வந்து, ஜோலார்பேட்டை வழியே சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், திருவல்லா, செங்கானூர், காயங்குளம் வழியே கொல்லத்திற்கு மதியம் 1.45 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், கொல்லம்-விசாகப்பட்டினம் சிறப்பு ரயில் (08540) நாளை (19ம் தேதி) முதல் ஜனவரி 21ம் தேதி வரை புதன்கிழமை ேதாறும் (10 சேவை) இயக்கப்படுகிறது. கொல்லத்தில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு, எர்ணாகுளம் டவுன், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடிக்கு அடுத்தநாள் காலை 7.22 மணிக்கு வந்து ரேணிகுண்டா, விஜயவாடா வழியே விசாகப்பட்டினத்திற்கு இரவு 11 மணிக்கு சென்றடைகிறது. இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு நடந்து வருகிறது. இதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.