மூதாட்டியை கட்டையால் தாக்கிய 4 பேர் மீது வழக்கு வேலூரில் முன்விரோத தகராறில்
Advertisement
வேலூர், செப்.15: வேலூரில் முன்விரோத தகராறில் மூதாட்டியை கட்டையால் தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வேலூர் கஸ்பா வசந்தபுரத்தை சேர்ந்தவர் குளோரி(61). கடந்த 12ம் தேதி குளோரின் பேரனுக்கு, அதேபகுதியைச் சேர்ந்த சொக்கு என்கிற சண்முகம்(30), ஆனந்த்(33), மனோகரன்(26), வெங்கடேசன்(28) ஆகியோருடன் தகராறு ஏற்படடது. பேரனுடன் தகராறு நடப்பதை அறிந்த குளோரி சம்பவ இடத்திற்கு சென்று தட்டி கேட்டார்.
மதுபோதையில், இருந்த 4 பேரும், குளோரியை கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த குளோரி, வேலூர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசில் குளோரி நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர்.
Advertisement