தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போலி பதிவெண் கொண்ட ஆம்னி பஸ் பறிமுதல் காட்பாடி அருகே சோதனை சாவடியில் அதிரடி ஆந்திராவில் இருந்து திருவண்ணாமலைக்கு இயக்கிய

வேலூர், செப்.14: ஆந்திராவில் இருந்து தினமும் திருவண்ணாமலைக்கு இயங்கிய தமிழ்நாடு போலி பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்சை காட்பாடி சோதனை சாவடியில் போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் அண்டை மாநில ஆம்னி பஸ்களில் போலியாக தமிழ்நாடு பதிவெண் பயன்படுத்தி ஏராளமான பஸ்கள் இயக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தது. புகாரின்பேரில் போக்குவரத்து ஆணையர் கெஜலட்சுமி, மற்றும் துணை ஆணையர் பாட்டப்பசாமி ஆகியோர் ஆம்னி பஸ்களை ஆய்வு செய்ய உத்தரவிட்டனர். இந்நிலையில் நேற்று காலை காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள சோதனை சாவடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் சுமேஷ் தலைமையில் ஆந்திராவில் இருந்து வேலூர் நோக்கி வந்த ஆம்னி பஸ்சை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர். அதில் ஆம்னி பஸ்சில் இருந்த நம்பரும், பதிவெண் சான்றிதழில் இருந்த நம்பரும் வேறுபட்டு இருந்தது. பதிவெண்ணை சோதனையிட்டபோது மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தது என தெரியவந்தது.

Advertisement

இதுகுறித்து நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த ஒருவர் பஸ்ஸை விலைக்கு வாங்கி போலியாக தமிழக பதிவெண் ஸ்டிக்கர் ஒட்டி கடந்த 3 ஆண்டுகளாக தினமும் ஆந்திராவிலிருந்து திருவண்ணாமலைக்கு பயணிகளை ஏற்றி வந்தது தெரியவந்தது. போலியாக தமிழக பதிவெண் பயன்படுத்தி பஸ்ஸை இயக்கியதால் மாதத்திற்கு ரூ.3 லட்சம் வரை அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளது தெரியவந்தது. எனவே, போலி பதிவெண் கொண்ட பஸ்ஸை பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, பஸ்சின் உரிமையாளர் யார் என கண்டறிந்து அவருக்கு 100 சதவீத வரி செலுத்தும்படி நோட்டீஸ் அனுப்பப்படும் எனவும், இதேபோல் தமிழகத்தில் ஏராளமான போலி பதிவெண் கொண்ட பஸ்கள் இயக்கப்படுவதால் இனி அனைத்து ஆம்னி பஸ்களும் சோதனை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News