மொைபல் போனில் காட்டன் சூதாட்டம் பெண் உட்பட 4 பேர் கைது
வேலூர், அக்.12: மொபைல் போன் மூலம் காட்டன் சூதாட்டம் ஆடிய பெண் உட்பட 4 பேரை பாகாயம் போலீசார் கைது செய்தனர். வேலூர் பாகாயம் போலீசாருக்கு சங்கரன்பாளையம், விருபாட்சிபுரம், தொரப்பாடி கே.கே.நகர் ஆகிய இடங்களில் மொபைல் போன் மூலம் காட்டன் சூதாட்டம் நடப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் இரவு மேற்கண்ட பகுதிகளில் பாகாயம் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதில் சங்கரன்பாளையம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த காட்டன் சூதாட்ட ஏஜென்ட் முருகன்(45), விருபாட்சிபுரம் இந்திரா நகர் ஓட்டேரி சாலையை சேர்ந்த செல்வம்(எ)செல்வகுமார்(49), தொரப்பாடி கே.கே.நகர் மெயின் ரோட்டை சேர்ந்த சலீம்(59), அதே பகுதியை சேர்ந்த கல்யாணி(41) ஆகிய 4 பேர் மொபைல் போன் மூலம் காட்டன் சூதாட்ட ஏஜென்ட்களாக செயல்பட்டது அவர்கள் வைத்திருந்த மொபைல் போன் சோதனை மூலம் கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக பாகாயம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.