ஆட்டுச்சந்தையில் விற்பனை மந்தம் கே.வி.குப்பத்தில் நடந்த
கே.வி.குப்பம், ஆக.12: கே.வி.குப்பத்தில் நேற்று நடந்த ஆட்டுச்சந்தையில் விற்பனை மந்தமாக இருந்தது. கே.வி.குப்பம் சந்தைமேடு பகுதியில் வாரந்தோறும் திங்கட்கிழமை ஆட்டுச்சந்தை நடந்து வருகிறது. இங்கு பல்வேறு இன ஆடுகள் திரட்சியான உடல் அமைப்புடன் கிடைப்பது மட்டுமில்லாமல் விற்போருக்கும் கணிசமான லாபம் கிடைக்கும் என்பதால் ஆடு வியாபாரிகள் அதிகளவில் கூடுகிறார்கள். கடந்த மாதங்களில் நடந்த சந்தைகளில் எதிர்பார்த்த அளவிற்கு நல்ல லாபம் கிடைத்ததாக ஆடு வளர்பவர்கள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், திங்கட்கிழமையான நேற்று காலை வழக்கம்போல ஆட்டுச்சந்தை கூடியது. ஆனால், கடந்த வாரங்களை போல் இல்லாமல் நேற்று நடந்த சந்தையில் ஆடுகள் வரத்து குறைவாக இருந்தது. காட்பாடி, குடியாத்தம், பரதராமி, ஒடுகத்தூர் உட்பட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆடு வளர்ப்பவர்கள் விற்பனைக்காக தங்களது ஆடுகளை கொண்டு வந்திருந்தனர். அதேபோல், ஆந்திர மாநிலத்தில் இருந்தும் ஆடுகளை கொண்டு வந்திருந்தனர். கடந்த வாரத்தை போல் ஆடுகள் வியாபாரம் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று வியாபாரம் மந்தமாக நடந்ததால் வியாபாரிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.