போலீஸ் ஏட்டை தாக்கியவர் கைது மனைவிக்கு வலை வேலூரில் தகராறை தடுத்த
வேலூர், செப்.11: வேலூரில் பைக் விபத்தில் ஏற்பட்ட தகராறை தடுத்த போலீஸ் ஏட்டை தாக்கியவர் கைது செய்யப்பட்டார். அவரது மனைவியை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் கன்சால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரவி(50). இவர் தனது மனைவியுடன் பைக்கில் கடந்த 8ம் தேதி சென்னை-பெங்களூரூ சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பைக்கும் மற்றொரு பைக்கும் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீஸ் ஏட்டு சூர்யபிரகாஷ், அங்கு சென்று தகராறை தடுத்து இருதரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ரவி, அவரது மனைவி ஆகியோர் சேர்ந்து ஏட்டு சூர்யபிரகாசை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வடக்கு போலீசில் சூர்யபிரகாஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவியை நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் அவரது மனைவியை தேடி வருகின்றனர்.