தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனை வரவேற்க பர்தா அணிந்து வந்த ஆண் * வீடியோ வைரலானதால் பரபரப்பு * ஆள்மாறாட்ட வழக்கு பதிய கோரிக்கை ‘லேடி கெட்டப்பில் வந்த ஜீன்ஸ்’

வேலூர், டிச.10: பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனை வரவேற்க, ஆண் ஒருவர் பர்தா அணிந்து பெண்கள் வரிசையில் நின்று வரவேற்ற வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு ‘லேடி கெட்டப்பில் வந்த ஜீன்ஸ்’ என்பது உள்ளிட்ட கமெண்ட்களை நெட்டிசன்கள் அள்ளி வீசுகின்றனர். மேலும் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதியவும் கோரிக்கை வலுத்துள்ளது. தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கடந்த நவம்பர் 10ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். பாஜ தலைவரை வரவேற்பதற்காக பேப்பர் பிளேட்டுகளில் மலர்களுடன் பெண்கள் வரிசையில் நின்றிருந்தனர். பர்தா அணிந்தபடி சில இஸ்லாமிய பெண்களும் இருந்தனர். இதில் ஆண் ஒருவர் பர்தா அணிந்து பெண் வேடத்தில் வரவேற்க காத்திருந்தார்.

Advertisement

தற்போது பெண் வேடத்தில் ஆண் ஒருவர் கூட்டத்தில் நின்றிருந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த காட்சியில் பர்தா அணிந்த நபரின் முகத்தில் இருந்து ஆடை விலகுவதை சரிசெய்கிறார். இதனை அருகில் நின்றிருந்த பெண் ஒருவர் கண்டுபிடித்து அதிர்ச்சியுடன் பார்க்கிறார். பாஜவுக்கும், கூட்டணி கட்சியான அதிமுகவுக்கும் இஸ்லாமியர்கள் ஆதரவு இருப்பதாக மக்களை நம்ப வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், இஸ்லாமிய பெண்களை அழைத்தும் போதிய எண்ணிக்கையில் வராததால் பாஜ நிர்வாகி ஒருவரே கூட்டத்தில் பர்தா அணிந்து பங்கேற்றிருக்கலாம் என இப்போது கூட்டணி கட்சியினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், ‘லேடி கெட்டப்பில் வந்த ஜீன்ஸ்’ என கிண்டலடித்தும், திட்டியும் நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்களை அள்ளி வீசுகின்றனர். மேலும் பர்தா அணிந்த ஆண், இஸ்லாமிய பெண்கள் கூட்டத்தில் புகுந்தது குறித்து உரிய விசாரணை நடத்தி ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுத்துள்ளது.

Advertisement