தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆட்டு சந்தையில் தொடர்ந்து விற்பனை மந்தம் கே.வி.குப்பம்

கே.வி.குப்பம்,செப்.9: கே.வி.குப்பம் ஆட்டுசந்தையில் தொடர்ந்து விற்பனை மந்தமாக நடைபெற்றது. வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஆட்டுச்சந்தை மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்தது. வாங்குவோர் விரும்புகிற இன ஆடுகள், திரட்சியான உடல் அமைப்புடன் கிடைப்பது மட்டுமில்லாமல், விற்போருக்கும் கணிசமான லாபம் கிடைக்கும் என்பதால்தான், ஆடு வியாபாரிகள் அதிகளவில் இங்குக் கூடுகிறார்கள். கே.வி.குப்பம் சந்தை மேடு பகுதியில் பிரிதி வாரம் திங்கள்கிழமை இயங்கி வருகிறது இந்த ஆட்டுச்சந்தை. இந்நிலையில் கடந்த மாதங்களில் நடைபெற்ற சந்தைகளில் எதிர்பார்த்ததுபோல் நல்ல லாபம் கிடைத்ததாக ஆடு வளர்ப்பவர்கள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து திங்கட்கிழமையான நேற்று காலை வழக்கம்போல சந்தை கூடியது. ஆனால் கடந்த மாதங்களை போலவே நேற்று நடைபெற்ற சந்தையில் ஆடுகள் வரத்து குறைவாக இருந்தது. அதுமட்டுமின்றி வியாபாரிகள் குறைந்த அளவிலேயே கூடியிருந்தனர். காட்பாடி, குடியாத்தம், பரதராமி, ஒடுகத்தூர், உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆடு வளர்ப்பவர்கள், ஆடுகளை கொண்டு வந்திருந்தனர். மேலும், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இருந்தும் ஆடுகள் கொண்டுவந்தனர். ஆடுகள் வரத்து அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில். தொடர்ந்து வியாபாரம் மந்தமாக நடைபெற்றதால் வியாபாரிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

Advertisement

Advertisement