பத்திரப்பதிவில் அடுத்த மாதம் 3.0 அமல் காட்பாடியில் அமைச்சர் மூர்த்தி தகவல்
வேலூர், அக்.8: தமிழகத்தில் பத்திரப்பதிவில் அடுத்த மாதத்தில் 3.0 அமல்படுத்தப்படும் என்று காட்பாடி அமைச்சர் மூர்த்தி கூறினார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் சார்பதிவாளர் அலுவலகத்தை பத்தரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறுகையில், ‘தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் செயல்படுத்தப்படும் 2.0 வர்ஷனில், பத்திரத்தின் பதிவெண்ணை பதியக்கூடிய எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் பத்திரப்பதிவுத்துறையில் அடிக்கடி சர்வர் பிரச்னை எழுந்து வருகிறது. இந்த பிரச்னைகளை போக்க, பத்திரப்பதிவில் 3.0 வர்ஷன் மிக விரைவில் கொண்டு வரப்பட உள்ளது. 3.0 வர்ஷன் அதிவேகமாக இருக்கும். இந்த புதிய அப்ேடட் மிக விரைவில் அறிவிக்கப்படும். அப்போது எந்தவிதமான சர்வர் தடையும் இருக்காது. தற்போதைய சர்வர் பிரச்னை சரியாகிவிடும். 3.0 அடுத்த ஒரு மாதத்தில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.