தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வரி வசூலுக்கு சென்ற ஊராட்சி செயலரை சரமாரி தாக்கிய போதை ஆசாமி சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் ஒடுகத்தூர் அடுத்த குருவராஜாபாளையத்தில்

ஒடுகத்தூர், டிச.7: ஒடுகத்தூர் அடுத்த குருவராஜாபாளையம் பகுதியை சேர்ந்தவர் கேசவன்(38), இவர் அதே கிராமத்தில் ஊராட்சி செயலராக பணியாற்றி வருகிறார். அதேபோல் அதே கிராமம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் சிவகுமார்(46), இவர் கேபிள் டிவி மற்றும் சுப விஷேசங்தளுக்கு பந்தல் அமைக்கும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று குருவராஜாபாளையம் ஊராட்சியில் துணை பிடிஓ மனோகரன் தலைமையில் ஆசனாம்பட்டு, அகரம், குப்பம்பட்டு, குப்பம் பாளையம் ஆகிய பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி செயலர்கள் கொண்ட குழுவினர் வீட்டு வரி வசூல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

Advertisement

இதனால் நேற்று குருவராஜாபாளையம் ஊராட்சி முழுவதும் வீடு வீடாக சென்று வீட்டு வரியை வசூல் செய்தனர். அதேபோல், பிள்ளையார் கோயில் தெருவில் அதிகாரிகள் வீட்டு வரி வசூல் செய்து கொண்டு இருந்தனர். அப்போது, அங்கு மது போதையில் வந்த சிவகுமார் வரி வசூலுக்கு வந்த அரசு அதிகாரகளிடம் ‘எங்கள் பகுதிக்கு கடந்த 4 நாட்களாக குடிநீர் வரவில்லை எதற்கு நாங்கள் வரி செலுத்த வேண்டும் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்த ஊராட்சி செயலர் கேசவன் சிவகுமாரிடம் தட்டி கேட்டுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் ஆபாசமாக பேசி கொண்டுள்ளனர்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சிவகுமார் மது போதையில் கேசவனை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் தங்களின் செல்போனில் வீடியோ எடுத்து முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து, துணை பிடிஓ மனோகரன், ஊராட்சி செயலர் கேசவன் ஆகியோர் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் போலீசார், அரசு பணியை செய்யவிடாமல் தடுத்தது, அரசு ஊழியரை தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒடுகத்தூர் அருகே வரி வசூலுக்கு சென்ற ஊராட்சி செயலரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement